திருகோணமலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரிப்பு

திருகோணமலை நகரப் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில்  13 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி இதுவரையில், கோமரங்கடவல பகுதியில் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கிண்ணியாவில் 16 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், குச்சவெளியில் 2 பேரும் மூதூரில் 42 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சேருவில பகதியில் 3 கொரோனா நோயாளர்களும் தம்பலகாமம் பகதியில் 6 பேரும் திருகோணமலையில் 84 பேரும் உப்புவெளியில் 4 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts