சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 75 பேர் கைது

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 ஆலோசனைகளை பின்பற்றத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts