கொரோனாவால் நேற்று பதிவான மரணங்கள் குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 3 கொரோனா மரணங்கள் நேற்று பதிவானதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 13, கொழும்பு 12 ஆகிய பகுதிகளிலேயே இந்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய கொழும்பு -13 ஐச் சேர்ந்த 93 வயதான பெண்ணொருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பல சிக்கல் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத 70 முதல் 80 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் மருதானை பொலிஸ் பிரிவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கொழும்பு 12ஐச் சேர்ந்த 76 வயதான ஆணொருவர் கொரோனா நோயாளர் என அடையாளங்காணப்பட்டதை அடுத்து, கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோயினால் அவர் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts