கொட்டதெனியாவ பகுதியில் வெடிப்பு சம்பவம் – இந்திய பிரஜை உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்!

கம்பஹா – கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டதெனியாவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றின் கொதிகலனொன்று வெடித்துள்ளமை காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts