வெளிநாடுகளில் தங்கியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய நடவடிக்கை!

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய இலங்கை அரசாங்கம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே சில நாடுகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்ய இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையின் மூலம் 18 சிவப்பு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் தற்போது வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் இந்த ஆண்டு கைது செய்யப்படுவார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டு ஜெனீவாவில் எழுப்பப்படக்கூடும் என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனை தொடர்பில் பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், போர்க்குற்றங்கள் இராணுவத்தால் செய்யப்படவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

Related posts