யுக்ரேன் சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ..!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை கட்டியெழுப்பும் நடவடிக்கை தோல்வியடைந்தால் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி அடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

யுக்ரேனில் இருந்து வந்த முதலாவது சுற்றுலா பயணிகள் குழுவில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாமை கதொடர்ந்து அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஆபத்தான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து வெளியே சென்றால் சமூகத்திற்கு பாரிய சிக்கல் நிலைமை ஏற்பவதனை தடுக்க வேண்டும். தலதா மாளிகை, சீகிரியா போன்ற இடங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் செல்வதனால் தீவிர அவதானம் செலுத்த வேண்டும்.

சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதே சந்தர்ப்பத்தில் 22 மில்லியன் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் போது சுகாதார நடவடிக்கைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு உட்பட அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts