மத்திய கிழக்கில் பணிப்புரியும் வீட்டுப் பணிப்பெண்கள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!!

இலங்கைக்கு திரும்பி வர அறவிடப்படும் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டுள்ளதாக கூறி மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்கள் வெளியிட்டுள்ள காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு திரும்பி வர தேவையான பயணத்தை சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தவிர வேறு மாற்று வழியில்லை என மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரியும் இலங்கை பெண்கள் கூறியுள்ளனர்.

இலங்கைக்கு திரும்பி வர இலங்கை தூதரகம் பெருந்தொகை பயணத்தை அறவிடுவதாகவும், நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்திற்கொள்ள தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்குவதற்கு விருப்ப கடிதத்தை எழுதி பெற்றுக்கொள்வதாகவும் இந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விருப்ப கடிதத்தை வழங்கினால் மாத்திரமே இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்குவதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

இது மிகவும் அநீதியானது. சிறு தொகை சம்பளத்திற்கு வேலை செய்யும் தான் எப்படி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தி 5 நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் இந்த கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூதரகத்தின் தலையீடு இன்றி தாம் நேரடியாக நாடு திரும்ப அனுமதி வழங்குமாறு இந்த பெண்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்காக தூதரகம் கோரும் பணத்தை தம்மால் செலுத்துவது சிரமம் என்பதால், அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தம்மை தனிமைப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts