கொரோனா சடலங்களில் இருந்து வைரஸ் பரவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை!

கொரோனாவினால் மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்தால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவ கல்லூரி ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (College of Community Physicians of Sri Lanka) இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய வழிகாட்டுதல்களின்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கல்லூரி குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவிய சூழ்நிலை என்பதால், தொற்றுநோயின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கட்டாய விதியை ஏற்றுக்கொண்டதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி கூறியுள்ளது.

எனினும் அடுத்தடுத்த சான்றுகளின் அடிப்படையில் அந்த ஏற்றுக்கொள்ளலை மறுபரிசீலனை செய்ய தாம் தூண்டப்பட்டதாக கல்லூரி தெரிவித்துள்ளது.

Related posts