மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய திட்டம்..!!

இந்தியாவிடம் இருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தடுப்பூசிகள் ஒரு மாதத்தில் இலங்கையை வந்தடையும் என்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை…

மேலும்

மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறப்பு..!

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தொிவித்துள்ளார்.

மேலும்

குறுகிய காலத்திற்கு பாவனைக்குட்படுத்தும் பிளாஸ்திக் பொருட்களுக்கு தடை..!

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்குட்படுத்தும் பிளாஸ்திக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடைசெய்யப்படவுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக்கூடிய விளையாட்டு பொருட்கள், பிளாஸ்திக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியன குறித்த…

மேலும்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 52 பேர் கைது..!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சிவில் அதிகாரிகள் சிலரை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் முக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்

மேலும்

மூவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து..!!

கொழும்பு-மினுவாங்கொடை பிரதான வீதியில் எக்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர். வேகமாக பயணித்த சிற்றூர்ந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 48, 49 மற்றும் 64 வயதான மூவரே உயிரிந்தனர்.

மேலும்

கார்த்தியின் ‘சுல்தான்’ மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!!

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிந்தன என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ‘சுல்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன்…

மேலும்

நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா தனுஷின் அடுத்த படம்..?

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வசூலை குவித்தது. இதனையடுத்து பல திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய…

மேலும்

ஜெனிவாவில் இம்முறை சவாலை எதிர்கொள்ள போகும் இலங்கை! திஸ்ஸ அத்தநாயக்க..!!

இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது என்பது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார். அரசு குறித்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து, உரியவாறான பிரதிபலிப்பை எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் வெளிப்படுத்த வேண்டும்…

மேலும்

யாழில் நடந்த பெரும் துயரம் – உயிர் தப்ப முயன்ற இளைஞன் மரணம்..!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் தப்பிக்க முயன்று பாய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது…

மேலும்

பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றுமே சிறப்பிடம்- கோபால் பாக்லே..!!

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையில் பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம் உள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலக வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டெழும் நோக்கில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் திட்டம் நிச்சயம் வெற்றியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ…

மேலும்