தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலுக்கு வாய்ப்பில்லை: மாநில தலைமை தேர்தல் அதிகாரி..!!

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. முன்னதாக தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த சத்யபிரதா சாகு, எனவே கூடுதலாக வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டியிருப்பதால் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Related posts