“உணவு பஞ்சம் ஏற்படும்” கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்..!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வேளாண் சட்டங்களை மீளப் பெறவும் வலியுறுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார்.

அந்த தீர்மானத்தில், “நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை இந்த சட்டம் பெரிதும் பாதிக்கும். இந்த சட்டங்கள் கார்ஃபரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது. விவசாயிகளுக்கு நியாய விலை வழங்கும் உத்தரவாதத்திலிருந்து மத்திய அரசு தவறிவிட்டது.” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்தோடு மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்கள் அமுலானால் கேரள விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் எனவும் கேரளாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவதை கைவிட்டுவிட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தார். இந்த தீர்மானம் கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts