‘மாஸ்டர்’ படத்திற்கு புரமோஷன் செய்த தனுஷ்..!!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது புரமோஷன் பணிகளை தொடங்கி உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை புரமோஷன் செய்யும் வகையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த செய்தியாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க ரசிகர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

தியேட்டர் அனுபவம் போல எதுவும் இல்லை என்பதையே அனைவரும் இந்த படத்தை பார்த்து உணர்ந்து கொள்வார்கள். தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திரையரங்குகளில் ’மாஸ்டர்’ படத்தை பாருங்கள் என்று தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனுஷின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts