கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி..!!

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நால்வர் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அளவுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதனாலேயே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு ஜேர்மன் கடற்கரை பகுதியான Stralsund நகரத்திலேயே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இப்பகுதியில் உள்ள முதியோர் இல்ல ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதியோர் காப்பகம் ஒன்றின் 8 ஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவை விடவும் 5 மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தவறுதலாகவே இது நடந்தது என அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts