ஐரோப்பிய நாடான குரோசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு..!!

ஐரோப்பிய நாடான குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டடங்கள் சேதமடைந்தன என்பதுடன், சிலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கி.மீற்றர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரோசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் செர்பியா மற்றும் போஸ்னியாவிலும் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் நேற்று முன்தினம் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts