ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா..!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெய்னில் 19 இலட்சத்து 06 ஆயிரத்து 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 11 ஆயிரத்து 985 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு மொத்தமாக இதுவரை 50 ஆயிரத்து 442 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரான்சில் 25 இலட்சத்து 74 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 11 ஆயிரத்து 395 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் 16 இலட்சத்து 86 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 15 ஆயிரத்து 960 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 935 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று இத்தாலியில் 20 இலட்சத்து 67 ஆயிரத்து 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 11 ஆயிரத்து 212 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 659 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts