இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் மரணம்!

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த நபரான 117 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களுத்துறை – தொடாங்கொடை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

நாகொடா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடங்கொட உதவி அரச முகவரின் அலுவலகத்தினால் குறித்த பெண்ணின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts