அவர் தான் காரணம்: விஜே சித்ராவின் உதவியாளர் திடுக் தகவல்..!!

சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சித்ராவிடம் உதவியாளராக இருந்த சலீம் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் சித்ரா மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

சித்ராவுக்கு நான் தான் முழு நேர உதவியாளராக இருந்தேன். அவரை விதவிதமாக புகைப்படம் எடுத்து அவருடைய இன்ஸ்டா ஃபேன் பக்கத்தில் பதிவு செய்வேன். அவரை நான் புகைப்படம் எடுப்பது இந்த துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நான் சித்ராவை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதாக என் மீது பழியை போட்டு ஹேமந்த் தான் என்னை வேலையை விட்டு தூக்கிவிட்டார். என்னை வேலையைவிட்டு நீக்கும்போது என் செல்போனை வாங்கி எல்லாத்தையும் டெலிட் செய்துவிட்டார்கள். நான் சித்ராவை விதவிதமாக வீடியோ எடுப்பது ஹேமந்துக்கு பிடிக்கவில்லை. என்னை அடித்து உதைத்து, ஆபாச வீடியோ நான் எடுத்ததாக பழிபோட்டு என்னை துரத்தி விட்டுவிட்டார்கள். என்னுடைய வீடியோ, புகைப்படங்களை வாங்கி தான் சித்ராவே இன்ஸ்டாவில் போடுவாங்க. ஆனால் என்மேல் தேவையில்லாமல் ஹேமந்த் பழிபோட்டுவிட்டார்

சித்ராவிடம் இருந்து வெளியே வந்தபின்னர் நான்கு மாதங்களாக நான் சித்ராவை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. சித்ரா என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் ஹேமந்திடம் ஏதோ ஒரு வகையில் அவர் சிக்கி கொண்டதால் என் விஷயத்தில் அவர் ஹேமந்தை எதிர்த்து பேசவில்லை.

சித்ராவை ஹேமந்த் திட்டமிட்டு தான் கொலை செய்திருப்பார். சொந்த வீடு இருக்கும்போது வில்லாவில் தங்கியதே சித்ராவை கொலை செய்வதற்குதான். போலீஸ் இன்னும் தீவிரமாக விசாரணை செய்தால் உண்மை தெரிய வரும். இவ்வாறு சித்ராவின் உதவியாளர் சலீம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts