21 வயது மேயர் ஆர்யாவிற்கு வாழ்த்து -நாமல் ராஜபக்ச ..!!

கேரளாவின் திருவனந்தபுரம் நகரின் மேயராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது யுவதிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் நகரின் மேயராக ஆர்யா பதவி ஏற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவின் வெற்றிக் கதை பல இளைஞர், யுவதிகளுக்கு முன்னுதாரணமாக அமையும் எனவும், குறிப்பாக பெண்கள் ஊக்கமடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் மாநகரசபை தேர்தலில் சீ.பி.ஐ கட்சி வெற்றியீட்டியதுடன், மேயர் பதவிக்கு ஆர்யாவை நியமிக்கத் தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் ஆர்யா இன்றைய தனம் தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts