‘மாஸ்டர்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி..!!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

திரையரங்குகளில் வாத்தி கம்மிங் 13ஆம் தேதி என்றும் அந்த டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் மோதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழி போஸ்டர்களும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த போஸ்டர்களில் இருந்து ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஜனவரி 14ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் இதுகுறித்த ஹேஷ்டேக்குகள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts