பாலாஜியை கண்கலங்க வைத்த ஷிவானி தாயார் வருகை..!!

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பதையும் ’இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றாயா? என்று ஷிவானியிடம் அவரது தாயார் கண்டிப்பது போன்ற காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பது குறித்து பார்த்தோம்.

இந்த நிலையில் ஷிவானியிடம் ஒரு சில நிமிடங்கள் மிகவும் ஆவேசமாக தனியாக அவரது தாயார் பேசிக்கொண்டிருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாலாஜி மிகுந்த வருத்தப்படுகிறார். என்னால் தான் பிரச்சனையோ என்று மிகுந்த வருத்தப்படும் பாலாஜிக்கு ரம்யா ஆறுதல் கூறுகிறார். இதுகுறித்து அவரிடம் ரம்யா கூறியபோது, ‘இருவருக்கும் இடையே நிறைய ரியாக்சன் வெளியே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களை பற்றி ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறுகிறார். மேலும் நீ ஏன் உன்னுடைய ஒபினியனை எடுத்து வைக்கவில்லை என்றும் கம்போர்ட் ஜோனில் இருப்பதென்றால் நீ வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று மகளை கண்டிக்கிறார் என்று ரம்யா கூறுகிறார்.

ஆனால் பாலாஜி இதனால் சமாதானம் அடையவில்லை. நானும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றேன் என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னிடம் எதுவுமே அவங்க போனது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது என்று பாலாஜி வருத்தத்துடன் கண் கலங்கும் காட்சி இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.

இதில் இருந்து ஷிவானியின் தாயார் பாலாஜியை சந்தித்து பேசாமல் ஷிவானியிடம் மட்டும் பேசி சென்றதாக தெரிகிறது.

Related posts