உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்! உறுதிப்படுத்தும் அமைச்சர்..!!

அடுத்த மாத இறுதிக்குள் கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட சுற்றுலா பயணிகள் நேற்றை தினம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்தனர். இந்த சுற்றுலா பயணிகளுடன் 20 சிறுவர்களும் வருகைத்தந்திருந்தனர்.

இந்த பயணத்தின் வெற்றி தொடர்பில் ஆராய்ந்து அதன் குறை நிறைகளை கண்டுபிடித்து சுகாதார பாதுகாப்பிற்கமைய எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை உத்தியோகபூர்வதாக திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய வர்த்தக விமான பயணங்கள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாட்டை திறப்பதனால் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களை அழைக்கும் நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாது.

மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை திறப்பதனால் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் என்று எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை.

சுற்றுலா பயணிகள், நாட்டு மக்களுடன் தொடர்புபடுவது குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் கடற்கரைகளுக்கு மாத்திரமே செல்ல முடியும்.

இந்த காலப்பகுதியினுள் குறித்த சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் கடற்கரைக்கு இலங்கையர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்பதனால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts