இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்..!!

எதிர்காலத்தில் இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்காக அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

சீனாவின் அழுத்தங்களுக்கு எதிராக இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பது அதில் ஒரு நிபந்தனையாகும்.

அத்துடன் சமய மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் நிதி செலவு சட்ட மூலத்தை அந்நாட்டு செனட் சபை திருத்தம் செய்துள்ளது.

அமெரிக்காவின் கொரோனா வைரஸ் நிவாரண பொதி தொடர்பான நிபந்தனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts