அதி வீரியம் மிக்க கொரோனா வைரஸ் ; உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு..!!

அதி வீரியம் மிக்க உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவில் பரவி வருவதால் நாம் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடு முழுதும் கொரோனா தொற்று பரவல் பெரும் அளவில் குறைந்துள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே  தீவிர கண்காணிப்பு நோய் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து  அதை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கும் பணி  அதிக அக்கறையுடன் செயற்படுத்தப்பட வேண்டும்.

அப்பகுதிகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். முந்தைய வழிகாட்டு நெறிமுறைகளின் போது அனுமதி அளிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகள் அதே நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்கள் ஜனவரி 31 வரை நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts