முஸ்லிம் தலைமைகளின் கைது சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் செயற்பாடே_கிண்ணியா நகர சபையில் பிரேரனை

முஸ்லிம் தலைமைகளின் கைதுகள் சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் அடக்குமுறையே ஆகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவித்தார்.
முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் கைது தொடர்பில் இன்று (28) நடைபெற்ற கிண்ணியா நகர சபை அமர்வின் போது கைதுக்கு எதிரான பிரேரனை தொடர்பில் முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் கைது அரசியல் பழிவாங்கலாகும் அரசின் பழி தீர்க்கும் செயற்பாடே இது .இவ்வாறான கைதுகள் எமது சமூகத்தின் மீது ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் அடக்கி ஒடுக்கப்படுவது இவ் அரசின் மீதுள்ள சிறுபான்மை இன மக்கள் மீதுள்ள நம்பிக்கை இல்லாமல் போகின்றது.முன்னால் அமைச்சர் றிசாத் போன்ற தலைமைகளின் கைதும் இப்படியான அரசியல் காழ்ப்புணர்ச்சியே இல்லாத பொல்லாத குற்றச்சாட்டின் மூலமான கைதுகள் தங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.முஸ்லிம் சமூகம் ஆயிரம் வருடங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வந்த வரலாறுகள் சான்றுபகின்றன. அமைதியையும் சமாதானத்தையும் விரும்புபவர்களே தங்களும் தாங்கள் சார்ந்த கட்சிகளும் எனவே இவ்வாறான கைதுகள் நிறுத்தப்பட்டு நாட்டில் சிறுபான்மை சமூகத்தை நிம்மதியாக தலை நிமிர்ந்து வாழ வேண்டிய கட்டத்தை இந்த அரசாங்கம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார்.

Related posts