முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

கனத்த மழை காரணமாக தம்பலகமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப் பொத்தானை ஜாமியா நகர் வீதி வெள்ள நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வீட்டினுள் நீர் உட்புகுந்துள்ளதுடன் விவசாய நிலங்கள் என பல பாதிப்புக்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். வடிகான்கள், வீதிகள் ஊடாக பாய்ந்த வெள்ளப்பெருக்கு காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தும் உள்ளது.
 இதனை கருத்திற் கொண்டு தம்பலகமம் பிரதேச சபை, தம்பலகமம் பிரதேச செயலகம் இணைந்து வெள்ள நடவடிக்கைகளை துரித கதியில் கட்டுப்படுத்த ஜே.சிபி இயந்திரத்தை கொண்டு நீர் வடிந்தோடக்கூடிய வகையில் களத்தில் இறங்கியுள்ளார்கள். 
களத்திற்கு திடீர் விஜயம் செய்த தம்பலகமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி அவர்கள் கள நிலவளரங்கள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் நீரை வெளியேற்ற துரித மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும் உரியவர்களை பணித்தார். இதில் தம்பலகமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள்.


Related posts