உக்ரைனிலிருந்து 200க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட விமானம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இலங்கைக்கு வரவுள்ளது.
தொற்று காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் நாட்டிற்கு வரவுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் நுழைவதை நிறுத்தி விமான நிலையத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், இந்த விமானத்தின் வருகையுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இந்த திட்டத்தின் கீழ் திட்டமிட்டபடி கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதன்படி, பைலட் திட்டம் வெற்றிகரமாக இருந்தால், இலங்கை சர்வதேச விமான நிலையம் அதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விரிவாக திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.