‘அளிக்கப்படும் சாட்சியங்கள்’ ஆவண கையேடு நூல் வெளியீடு

‘அளிக்கப்படும் சாட்சியங்கள்’ ஆவண கையேடு நூல் வெளியீட்டு நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts