அரச கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய்வு

அரச கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts