ஜனாதிபதி கோட்டாவின் திடீர் கள விஜயம்..!!

படைப் புழுவினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலைமைகள் தொடர்பாக ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, அனுராதபுரம், எலபத்துவ மற்றும் பஹலகம ஆகிய பகுதிகளுக்கு ஜனாதிபதி நேற்று (சனிக்கிழமை) கள விஜயமொன்றை மேற்கொண்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

படைப்புழுவின் தாக்கத்தின் ஊடாக, பெரும்பாலான சோளப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.

இதற்கமைய, படைப்புழுவின் தாக்கம் இந்த வருடமும் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடை அதிக சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன் தமது பயிர்ச் செய்கைகளுக்கு யானைகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர்.

Related posts