மஹர சிறைச்சாலை விவகாரத்தில் புதிய திருப்பம்..!!

மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டு கைதிகளும் துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலரவத்தில், 11 கைதிகள் உயிரிழந்தமை 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண, ஆங்கில ஊடகமொன்றுக்கு மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த கைதிகள் தொடர்பாக இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹரசிறைச்சாலை கலவரத்தில் 8பேரின் உடல்களை பிரதேசப்பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்தனர் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் கலவரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை வரை காயமடைந்த கைதிகள் உட்பட 726 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் 3000 கொரோனா வைரஸ் நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts