புதிய வகை கொரோனா – மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை..!!

இங்கிலாந்திலிருந்து பரவும் புதிய வகை கொரோனா குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து மாதந்தோறும் ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து வீரியமிக்க கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா குறைந்துள்ளது, அடுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து அப்போது கேட்டறியவுள்ளார்.

ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்கள் விரைவில் வருவதால், அப்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அவர் கேட்டறியவுள்ளார்.

Related posts