ரஷ்யாவிடமிருந்து அர்ஜென்டினா 3 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் கொள்வனவு..!!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினா, ரஷ்யாவிடமிருந்து 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்துள்ளது.

மாஸ்கோவிலிருந்து ஏரோலினியாஸ் அர்ஜென்டினாஸின் சிறப்பு விமானத்தில், தடுப்பூசி புவெனஸ் அயர்ஸின் புறநகரில் உள்ள எஸீசா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் தடுப்பூசியை வழங்கத் தொடங்குவார்கள் என்று அர்ஜென்டினா அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்

ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

ரஷ்யா மற்றும் பெலாரஸுக்குப் பிறகு ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த மூன்றாவது நாடாக அர்ஜென்டினா ஆனது.

அதிகாரப்பூர்வமாக செயற்பாட்டுக்கு வந்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்தை கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் இணைந்து உருவாக்கியுள்ளது.

Related posts