யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!!

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts