மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றிலிருந்து பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் வைரஸ் தொற்றினால் பத்து இலட்சத்து ஐந்தாயிரத்து 248பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் 13இலட்சத்து 50ஆயிரத்து 79பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 311பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 11ஆயிரத்து 653பேர் பாதிக்கப்பட்டதோடு 816பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 24ஆயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூவாயிரத்து 913பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Related posts