நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மாத்தறை – திக்வெல்ல – யோனக்கபுர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியலாங்களில் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 7 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts