பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 69ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 69ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 69ஆயிரத்து 51பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 21இலட்சத்து 49ஆயிரத்து 551பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 39ஆயிரத்து 237பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 744பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 529பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts