தடை உத்தரவை மீறி பேரணி : ராகுல் காந்தி கைது..!!

குடியரசுத் தலைவரை சந்திக்கும் விதமாக டெல்லியில் பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி குடியரசுத்தலைவரை சந்திக்கும் விதமாக விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்.

பேரணியானது குடியரசுத் தலைவர் மாளிகையை நெருங்கியபோது ராகுல்காந்தி உள்ளிட்டோரை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

டெல்லியில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி பேரணி சென்றதால் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts