ஜாம்பாவன் பீலேவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி..!!

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை, தலைமுறையின் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

ஒரே கால்பந்து கழக அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி பதிவுசெய்துள்ளார்.

முன்னதாக பிரேஸில் வீரர் பீலே, பிரேஸில் நாட்டின் சான்டோஸ் கழக அணிக்காக 1956 முதல் 1974ஆம் ஆண்டு வரை 665 போட்டிகளில் விளையாடி 643 கோல்கள் அடித்திருந்தார். இதுவே ஒரே கால்பந்து கழக அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்தது.

தற்போது 33வயதான அர்ஜெண்டினா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தான் விளையாடிவரும் கழக அணியான ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக, 749 போட்டிகளில் விளையாடி 644 கோல்களை அடித்து பீலேவின் சாதனையை, முறியடித்துள்ளார்.

நடப்பு லாலிகா தொடரில் ரியல் வல்லடோலிட் அணிக்கெதிரான போட்டியில், மெஸ்ஸி 1 கோல் அடித்ததன் மூலம் இந்த புதிய சாதனையை பதிவுசெய்தார்.

Related posts