ஜாம்பாவன் பீலேவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி..!!

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை, தலைமுறையின் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். ஒரே கால்பந்து கழக அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி பதிவுசெய்துள்ளார். முன்னதாக பிரேஸில் வீரர் பீலே, பிரேஸில் நாட்டின் சான்டோஸ் கழக அணிக்காக 1956 முதல் 1974ஆம் ஆண்டு வரை 665…

மேலும்

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 69ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 69ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 69ஆயிரத்து 51பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 21இலட்சத்து 49ஆயிரத்து 551பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த…

மேலும்

கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாது? லொரி சாரதிகள் வருத்தம்..!!

கிறிஸ்மஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்ட சொந்த ஊருக்கு திட்டமிட்டிருந்த சரக்கு லொரி சாரதிகள் பலரும் பிரான்ஸ்- பிரித்தானியா எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான லொரிகள் பிரித்தானிய- பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர். இதனால், மிகவும் காலதாமதம் ஏற்பட்டு…

மேலும்

இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் 17 இலட்சம் பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் காற்று மாசுவினால் கடந்த ஆண்டு மட்டும் 17 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சர்வதேச சுற்றுச்சூழல் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், “ இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவால் 40 விழுக்காடு மக்கள் நுரையீரல் நோய்களாலும் 60 விழுக்காடு மக்கள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ம்…

மேலும்

எம்.ஜி.இராமசந்திரனின் 33ஆவது நினைவு தினம்..!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 33ஆவது நினைவு தினம் இன்று(வியாழக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார். அதனைதொடர்ந்து வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும்…

மேலும்

நாளை நாடளாவிய ரீதியில் மூடப்படுகின்றன மதுபானசாலைகள்..!!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம்(வியாழக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நத்தார் பண்டிகை தினத்தை அடிப்படையாகக் கொண்டு மதுவரித்திணைக்களத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுப்படும் நபர்களை கைது செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்

அரசின் வாக்குறுதிகளை சட்டமாக இயற்றுமாறு விவசாயிகள் கோரிக்கை..!!

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்த போதும் அடிப்படை ஆதார விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை சட்டமாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய விவசாயத் தலைவர்கள் மேற்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன், தேவையற்ற சீர்திருத்தங்களை ஏற்க மாட்டோம்…

மேலும்

மேல் மாகாண எல்லையைக் கடக்க முடியாதவாறு போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவும் – PHI கோரிக்கை..!!

மேல் மாகாணத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் புதுவருட காலத்தில் மாவட்ட எல்லையைக் கடப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பணிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மூன்று குழுக்கள் ஆபத்தான…

மேலும்

தடை உத்தரவை மீறி பேரணி : ராகுல் காந்தி கைது..!!

குடியரசுத் தலைவரை சந்திக்கும் விதமாக டெல்லியில் பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி குடியரசுத்தலைவரை சந்திக்கும் விதமாக விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். பேரணியானது குடியரசுத் தலைவர் மாளிகையை நெருங்கியபோது…

மேலும்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 1740 பேர் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது…

மேலும்