பெண்மீதான தாக்குதலை தடுக்க சென்ற மூன்று பொலீசார் உயிரிழப்பு – மத்திய பிரான்சில் சம்பவம்..!!

மத்திய பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான நான்காவது பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் தொடர்பில், மத்திய பிரான்சின் பொலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலில் குறித்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தொலைபேசித் தகவலை அடுத்து பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், குறித்த நடவடிககையில் 48 வயதான துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலக்காகி மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts