அதிக தொகைக்கு ஏலம் போனது பிரட்மனின் பச்சை நிற டெஸ்ட் தொப்பி..!!

கிரிக்கெட் உலகின் முதல் ஜாம்பவானாக போற்றப்படும் டொன் பிரட்மனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பியை அவுஸ்ரேலிய வர்த்தகர் ஒருவர் இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

குறித்த தொப்பியை 1928ஆம் ஆண்டு தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரட்மன் பயன்படுத்தினார்.

1928 முதல் 1948 வரை அவுஸ்ரேலிய அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இன்றளவும் புகழப்படுகிறார்.

கிரிகெட் வரலாற்றில் இரண்டாவது அதிக தொகைக்கு ஏலம் போனது இந்த தொப்பியாகும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் சேன் வோர்னின் டெஸ்ட் தொப்பி இந்திய மதிப்பில் சுமார் ஐந்தரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts