வங்கி கொள்ளையர்களை விட வங்கியையே கொள்ளையிட்டவர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தனர்!எஸ்.வியாழேந்திரன்..!!

கடந்த ஆட்சிக்காலத்தின் போது மட்டக்களப்பில் ஒரு தொழிற்சாலையினையும் ஆரம்பிக்க முடியாத நிலையில் எத்தனோல் தொழிற்சாலையினை கொண்டு வந்து இந்த மாவட்டத்தினை சீரழிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கிக்கொள்ளையர்களை விட வங்கியையே கொள்ளையிட்டவர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு,சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் ஊடாக கிராம மட்ட பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பின்தங்கிய கிராமங்கள் இன்னும் பின்தங்கிய கிராமங்களாவே இருக்கின்றது.அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே உள்ளது.

எல்லைகள் பறிபோகின்றதுஇநிலம் பறிபோகின்றதுஇவளம் பறிபோகின்றது தமிழர்களுக்கு இந்த பிரச்சினையிருக்கின்றது.அந்த பிரச்சினையிருக்கின்றது என்று அரசியல் செய்வது இலகுவான அரசியலாகும்.அதனையே நாங்களும் செய்தோம்.அந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு.எதுவும் இல்லை.பிரச்சினைகளை அனைவராலும் சொல்ல முடியும்.அந்த பிரச்சினைக்கு யார் தீர்வு வழங்குவது அதனை மக்கள் கேட்கின்றனர்.

1இலட்சத்து 25ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் வடகிழக்கில் இருக்கின்றது.இவற்றில் மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை கொண்டுள்ளது.

சுமார் 36ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன.கிழக்கு மாகாணத்தில் 8000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

இவர்களை வைத்து அரசியல் செய்கின்றனர்.பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்கின்றனர்.அதற்கு தீர்வு இல்லை.நாங்கள் செய்யாத போராட்டங்கள் இந்த மாவட்டத்தில் இல்லை.

கடந்த அரசாங்கத்தின் ஊடாக பல திட்டங்களை நாங்கள் முன்வைத்தோம்.முன்னாள் அரசாங்கத்தினை பாதுகாக்கும் ஒவ்வொரு தடவையும் நாங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.எத்தனையோ தொழிற்சாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்தது.

ஒரு தொழிற்சாலையினை திறங்கள் என்று கூறினோம்.நான்காயிரம் பேர் கடமை புரிந்த வாழைச்சேனை காகிதாலையினை திறங்கள் என்று நாங்கள் கூறியபோது அதனை திறக்காமல் வாழைச்சேனையில் எத்தனோல் தொழிற்சாலையினை திறந்தார்கள்.

450கோடியில் அந்த தொழிற்சாலையினை திறந்தனர்.ஏற்கனவே மதுபானசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம்.அந்த நிலையில் மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழலில் தொடர்புபட்ட அர்ஜுன் மகேந்திரனின் மருமகனுக்கு எத்தனோல் தொழிற்சாலைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எல்லாரும் வங்கியில் தான் கொள்ளையடிப்பார்கள்.கடந்த அரசாங்கத்தில் வங்கையையே கொள்ளையடித்தனர்.

<

Related posts