கொரோனாவினால் உயிரிழந்தவரை எரிப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த ஒருவரின் உடலை எரிப்பதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

உடல்களை அடக்கம் செய்வது குறித்து சுகாதார அமைச்சு முடிவெடுக்கும் வரை குறித்த நபர் ஒருவரின் உடலை பிரதே அறையிலேயே வைத்திருக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பத்தினர் தாக்கல் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே சேக் அப்துல் காதர் என்ற நபரின் உடல் தொடர்பில் நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

84 வயதான சேக் அப்துல் காதர் கொரோனாவினால் உயிரிழந்திருந்தார்.

இதனை தொடர்ந்து உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அதிகாரிகள் முடிவெடுக்கும் வரையில் உடலை வைத்திருப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும் என உயிரிழந்தவரின் குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வைத்திருப்பதற்கு ஐந்து குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை வழங்க வேண்டும் என கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தினை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர்.

Related posts