ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயற்படுத்த தயார் – தேர்தல் ஆணையம்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயற்படுத்த தயாராகவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் திட்டத்தை, தேர்தல் ஆணையம் ஏற்கிறது. தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.…

மேலும்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக ஆளுநரிடம் ஸ்டாலின் தெரிவிப்பு

தமிழக அரசு மீது ஊழல் முறைப்பாடு குறித்த மனுவை ஆளுநரிடம் வழங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். இதன்போதே அ.தி.மு.க. அரசு மீதான 97 பக்க ஊழல் முறைப்பாடு பட்டியலை வழங்கினார். இதன்…

மேலும்

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க தீர்மனம்!

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் ரத்மலானா விமான நிலையங்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளன. இந்த நிலையிலேயே நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத்…

மேலும்

மேல் மாகாணத்தை தனிமைப்படுத்துமாறு கோரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்..!!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தை தனிமைப்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் ஏனைய பிரதேசங்களுக்கு பயணங்களை வரையறுத்து உத்தரவிடுமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொரோனா பரவும் அதிகமான ஆபத்துள்ள பிரதேசங்கள் எனவும் சங்கம் கூறியுள்ளது. நத்தார் மற்றும் புத்தாண்டை…

மேலும்

ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 822 பேர் இணைவு!நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பம்..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 822 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளரும் ,அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் அரசாங்க தகவல் திணைக்கள ஊடகப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேலையற்ற வறிய குடும்பங்களைச்…

மேலும்

வங்கி கொள்ளையர்களை விட வங்கியையே கொள்ளையிட்டவர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தனர்!எஸ்.வியாழேந்திரன்..!!

கடந்த ஆட்சிக்காலத்தின் போது மட்டக்களப்பில் ஒரு தொழிற்சாலையினையும் ஆரம்பிக்க முடியாத நிலையில் எத்தனோல் தொழிற்சாலையினை கொண்டு வந்து இந்த மாவட்டத்தினை சீரழிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வங்கிக்கொள்ளையர்களை விட வங்கியையே கொள்ளையிட்டவர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு,சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு…

மேலும்

கொரோனாவினால் உயிரிழந்தவரை எரிப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த ஒருவரின் உடலை எரிப்பதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. உடல்களை அடக்கம் செய்வது குறித்து சுகாதார அமைச்சு முடிவெடுக்கும் வரை குறித்த நபர் ஒருவரின் உடலை பிரதே அறையிலேயே வைத்திருக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்பத்தினர் தாக்கல் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே சேக் அப்துல் காதர் என்ற…

மேலும்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம்! யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் கோரிக்கை..!!

ஆடம்பரங்களைத் தவிர்த்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வருட நத்தார் தினம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வருட கிறிஸ்துவின் பிறப்பு விழாவை இந்த உலகத்திலே சூழ்ந்திருக்கின்ற இந்த பயங்கர தொற்று…

மேலும்

வானில் நேற்றிரவு ஏற்பட்ட அதிசய நிகழ்வு ..!!

வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் நேற்றைய தினம் சூரிய மண்டலத்தின் அளவு கோலுக்கு அமைய ஒரு தசத்திற்கும் குறைவான இடையில் தென்பட்டுள்ளன. இந்த காட்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையிலும் இந்த நிகழ்வை காணக் கூடியதாக இருந்து என ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரு கோள்களும் இவ்வாறு…

மேலும்

இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் 37,261 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்