நேற்று கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 594 கொரோனா நோயாளர்களுள், பெருமளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

253 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

124 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 62 பேர் கண்டி மாவட்டத்திலும், 49 பேர் களுத்துறை மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 14 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 13 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 12 பேரும் பதிவாகினர்.

அம்பாறை மாவட்டத்தில் 8 பேரும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 7 பேரும், காலி மாவட்டத்தில் 6 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 3 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 2 பேரும், மொனராகலை மாவட்டத்தில் ஒருவரும் கண்டறியப்பட்டனர்.

இதேநேரம், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இரண்டு பேருக்கும் தொற்று உறுதியானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts