தமிழ்க் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது..!!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதை அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் உணர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமையால் இம்முறை ஜெனீவா விவகாரத்தை நாம் தக்க முறையில் கையாள வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் நேரில் பேசி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும் என்றும் தாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் ஓரணியில் நின்று தமிழர்களின் உரிமைக்காக நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Related posts