ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – GMOA

ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அந்தச் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக முதியோர் இல்லங்களை உரியமுறையில் நிர்வகிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் முதியோர் இல்லங்களில் வைரஸ் பரவுவதை தடுக்கவேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts