சிவில் உடையில் பேருந்துகளில் பயணிக்கும் பொலிஸார் – மக்களுக்கு எச்சரிக்கை

400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் தனிமைப்படுத்தல் சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் சாரதிகளின் நடத்தை தொடர்பிலும் ஆராய இந்த அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து முகக்கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆயிரத்து 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளா

Related posts