இந்தியா – வியட்நாம் இடையிலான பேச்சுவார்த்தை..!!

இந்தியா – வியட்நாம் இடையே இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் இருநாட்டு பிரதமர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘ இந்தியா-வியட்நாம் ஆகிய இரு நாடுகளிடையே காணொலி வாயிலாக நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் இரு நாட்டுப் பிரதமர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதன்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துதல், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts