வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்..!!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்குள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாட்டுக்குள் வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டுக்கு வருவதற்கு தயாராக உள்ள இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சில் அனுமதி பெற்று பதிவு செய்துக் கொள்ள வேண்டும். எனினும் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் கட்டாயம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3500 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன. இதனால் ஒரு நாளுக்கு 3500 இலங்கையர்கள் மாத்திரமே நாட்டிற்குள் வர முடியும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts